மினுவங்கொட பிரதேசத்தில் மதியநேர உணவை, சரியான நேரத்துக்கு தரவில்லை எனக் கூறி 16 வயது மகளின் தலையை பிடித்து சுவற்றில் அடித்த தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான தந்தையை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மினுவங்கொட நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் சாந்தனி தயாரத்ன உத்தரவிட்டார்.
திவுலபிட்டிய, பிரதேச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவியொருவரின் தந்தையே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மகள் மருத்துவமனையில்
சந்தேக நபரின் மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரியச் சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் சந்தேக நபர் குடி போதையில் வந்து தனது மகளை எப்போதும் துன்புறுத்துவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவ தினத்தன்று , மகளின் தலையை சுவற்றில் மோதியதால் தலையில் காயமுற்ற மகள் திவுலபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.