கோட்ட கோ கம வளாகத்தால் ஏற்ப்பட்டுள்ள சேதம்

கோட்ட கோ கம என நிறுவப்பட்டுள்ள போராட்ட களத்தால் வளாகத்திற்கு ஏற்பட்ட சேதம் சுமார் 49 இலட்சம் ரூபா என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிக்கை ஒன்றில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

உரிய சேதங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை பெறுவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது.

பணிப்புரை

அத்துடன் அண்மையில், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தை சுற்றிய பகுதிக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு, போராட்டக்காரர்களிடமிருந்து இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.