அதிவேக நெடுஞ்சாலையில் நேற்றிரவு (23) இடம்பெற்ற வாகன விபத்தில் 47 வயதான கொரிய மொழி பயிற்சி ஆசிரியையான பிரியந்தி பண்டார உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தாயான இவர் 16 ஆவது கிலோமீற்றர் மைல் கல் அருகிலான சபுகஸ்கந்த பகுதியில் ஓடுகளைச் ஏற்றிச் சென்ற லொறியின் பின்புறம் அவரது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கார் சாரதியின் வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.