கடந்த மே மாதம் 9 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கல்கிசையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
45 வயதான சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுளளது.
வன்முறைச் சம்பவம்
மே 9ஆம் திகதி நாட்டில் இன்று ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் அவர்களது அலுவலகங்கள் அனைத்தும் மக்களினால் முற்றுகையிடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தவின் வீடு மற்றும் அவரது களுத்துறை அலுவலகமும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டு எரித்து தீக்கிரையாக்கப்பட்டது.
இதன்போது அங்கிருந்த பொருட்களையும் போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியிருந்தனர்.
அத்துடன் குருணாகலில் உள்ள ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடும் போராட்டக்காரர்களினால் தீக்கிரையாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.