இவர்களுக்கு இனி எரி பொருள் இல்லை!

எரிபொருளை சேமிப்பதற்கான அனுமதி பெறாத மற்றும் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப செயற்படாத நிறுவனங்களுக்கு சிபெட்கோ எரிபொருளை வழங்காது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் .

இதனை அமைச்சர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதி அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2,100 நிறுவனங்கள் தங்கள் சொந்த எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை நிறுவியுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை அனுமதியின்றி நிறுவப்பட்டுள்ளதை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அவதானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேசமயம் , 1, 250க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.