‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
“திருச்சிற்றம்பலம்” திரைப்படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. இதில் நித்யா மேனனின், ஷோபனா கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், நடிகை நித்யா மேனன் தனது சமூகவலைதளப் பக்கத்தின் நேரலையில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது தயவு செய்து தன்னை “தாய்க்கிழவி” என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.