பாதாள உலகத்தை ஒடுக்கும் விசேட நடவடிக்கை ஆரம்பம்!

பாதாள உலகத்தை ஒடுக்கும் விசேட நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர், மேல் மற்றும் தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப் படை, பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

நாட்டில் அண்மை காலங்களில் அதிகளவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகின.

இதற்கு போதைப்பொருள் சோதனைகள் மற்றும் பாதாள உலக அடக்கு முறைகளில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர்கள் மற்றும் நேரடியாக போதைப்பொருள் தடுப்பு நவடிக்கைகளில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதுமே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.