பிரபல நாடொன்றில் சுற்றுலா பயணியின் காதினை பதம் பார்த்த இளம் பெண்!

தாய்லாந்தில் 55 வயது மதிக்கக்கத்தக்க சுற்றுலா பயணியின் காதை 25 வயதுடைய பெண் பாலியல் தொழிலாளி கடித்து விழுங்கிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

பாலியல் தொழிலாளியாக இருக்கும் கன்னிகா என கூறப்பட்டிருக்கும் அப் பெண், 55 வயது முதியவரிடம் பேச முற்பட்ட போது முழு குடிபோதையில் இருந்து உள்ளார்.

போதையில் என்ன செய்வதென தெரியாத அப்பெண் அந்த முதியவரை வலதுப்புற காது மடலை முதலில் கடித்து அதை விழுங்கிவிட்டாராம்.

இதனால் வலியால் கதறி துடித்த சுற்றுலா பயணி கத்தி கூப்பாடு போட்டிருக்கிறார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, போதையில் அட்டகாசம் செய்த பெண்ணையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும், தன்னை கைது செய்ய விடாமல் தடுப்பதற்காக எங்களுடைய போலீஸ் அதிகாரியை அப்பெண் தாக்கி உள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.