புற்றுநோயை விரட்டும் புரோக்கோலி

ப்ராக்கோலி குளிர்காலப்பயிர். முட்டைக்கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரிடப்படும் இந்த ப்ராக்கோலியில் எண்ணற்ற சத்துப்பொருட்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக புற்றுநோய்க்கு சிறந்த எதிர்ப்பு மருந்து.

இரண்டு முதல் மூன்று கப் ப்ராக்கோலி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோய்க் கிருமிகளை வளரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள். அதேபோல ப்ராக்கோலியில் உள்ள பி காம்ப்ளக்சும், வைட்டமின் ஏ, சி, ஈ ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயில் இருந்தும் இதயத்தை காக்கிறது.

உடனடி மாரடைப்பு வராமலும் தடுக்கிறது. தைராய்டு நோய்க்கும், ப்ராக்கோலி மிகச்சிறந்த மருந்தாகும். இதனை பச்சையாக உண்பதினால் தைராய்டு சுரப்பியின் செயல்பாடு கட்டுக்குள் இருக்கும். கண் விழிகளின் பாதுகாப்புக்கு தேவையான வைட்டமின்கள் அனைத்தும் இதில் உள்ளதால் விழியை பாதுகாப்பதிலும் சிறந்த சேவையை ஆற்றுகிறது. முக்கியமாக காட்ராக்ட் வராமல் தடுக்கிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த ப்ராக்கோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு. ஜீரண சக்தியையும் அதிகரிக்க செய்யும்