நரம்புகள் பலவீனமாக இருக்கும் போது, உடலில் சரியான இரத்த ஓட்டம் இருக்காது. அதனால் பல பிரச்சனைகள் எழுகின்றன. உணவு முறையை ஆரோக்கியமாக மாற்றுவதன் மூலம் நரம்புகளை இயற்கையாக வலுப்படுத்தலாம்.
வலுப்படுத்தும் உணவுகள்
உலர் பழங்களை சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. அதில் ஒன்று நமது நரம்பு மண்டலத்தை வலுவாக்குவது.
உலர் பழங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது. இது உடலின் நரம்புகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்து.
நரம்பு பிரச்சனை உள்ளவர்கள் மட்டுமின்றி, அனைவரும் பாதாம், முந்திரி, வாதுமை பருப்புகள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால், நரம்பு மண்டலம் வலுவாக இருக்கும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நரம்புகளுக்கு மிகவும் முக்கியம். இது நரம்புகளுக்கு பலம் தரும். மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
அதனால் தான் மீன்களை உணவில் சேர்த்துக்கொள்வது நரம்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பச்சை காய்கறிகளில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன .வைட்டமின் பி, சி, ஈ, மெக்னீசியம், தாமிரம், ஃபோலேட் மற்றும் கால்சியம் ஆகியவை பச்சை காய்கறிகளில், அதிக அளவில் காணப்படுகின்றன.
இது நரம்புகளின் பலவீனத்தை நீக்குகிறது. அவற்றை உணவில் சேர்த்து கொள்வது நரம்பு பிரச்சனைகளில் இருந்து காக்கும் என்று கூறப்படுகின்றது.