ஜோதிடத்தில் ஒருவரின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சில பரிகாரங்கள் உள்ளன.
அவற்றை தினமும் தவறாது பின்பற்றி வந்தால், அதிர்ஷ்டத்தை பெற்று பணப்பிரச்சனை இல்லாத வாழ்க்கையை வாழலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி செய்ய வேண்டிவை
கிழக்கு திசையை நோக்கி சாப்பிடுவதால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அதேப் போல் உணவு உண்ணும் போது செருப்புக்களை அணியக்கூடாது.
வீட்டில் வழிபாடு செய்த பின்னரே தீபம் ஏற்ற வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் சீமைக்கருவேல மரத்தின் வேரை கொண்டு வந்து முறைப்படி வழிபட்டு, பணம் வைத்திருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
கோவிலில் கொடுக்கப்படும் மலர்களை அப்படியே தூக்கிப் போடாமல், ஆற்றிலோ அல்லது ஓடும் நீரிலோ போட வேண்டும். இல்லாவிட்டால் குழியில் புதைக்க வேண்டும்.
காலையில் எழுந்ததும் தவறாமல் பற்களைத் துலக்க வேண்டும். அதன் பின்னர் தான் ஏதாவது சாப்பிட வேண்டும்.
குளிக்காமல் கடவுள் சிலையை தொடக்கூடாது. அது அசுபமாக கருதப்படுகிறது. இவ்வாறு செய்யும் வீடுகளில் லட்சுமி வாசம் செய்வதில்லை என்பது ஐதீகம்.
ஜோதிட சாஸ்திரப்படி, வீட்டின் வடகிழக்கு மூலையில் கங்கை நீரைத் தெளிப்பதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் பரவும்.
ஒருவேளை கங்கை நீர் கிடைக்காவிட்டால், நீரில் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து அந்நீரை வீடு முழுவதும் தெளிக்கலாம்.