படு தோல்வியடைந்த விஜய் தேவரகொண்டாவின் லைகர் படம்

லைகர்
விஜய் தேவரகொண்டாவின் லைகர் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி இருந்தது. பூரி ஜெகன்நாத் இயக்கி இருந்த இந்த படம் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனாலும் விமர்சனங்கள் படு மோசமாக வந்ததால் வசூல் அதிகம் பாதிக்கப்பட்டது.

முதல் நாளில் குறிப்பிடத்தக்க வசூல் வந்தாலும் திங்கட்கிழமையில் இருந்து வசூல் மொத்தமாக குறைந்துவிட்டது. ஆகஸ்ட் 29ம் தேதி இந்த படம் வெறும் 2.5 கோடி மட்டுமே வசூலித்தது. இனிமேல் வசூல் அதிகரிக்குமா என்பதும் சந்தேகம்தான்.

இவ்வளவு நஷ்டமா
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்படி இந்த படம் வெறும் 30 சதவீதம் மட்டுமே ஈட்டும் என்றும், மொத்த பட்ஜெட் 140 கோடியில் 70 சதவீதம் நஷ்டம் தான் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நேற்று வந்த வசூல் தியேட்டர் வாடகைக்கு கூட போதவில்லை எனவும் தெரிகிறது. அதனால் லைகர் கிட்டத்தட்ட வாஷ்அவுட் ஆகிவிட்டது என்றே கூறலாம்.