கோப்ரா
சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் கோப்ரா.
கிட்டதட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு விக்ரமின் திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியானது. இதனால் அவரின் ரசிகர்கள் அனைவரும் கோப்ரா திரைப்படத்தை பெரியளவில் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் இப்படம் நேற்று வெளியானதில் அதிகமாக கலவையான பெற்று வருவதை பார்த்து வருகிறோம். அப்படி இருந்தும் கோப்ரா திரைப்படம் நல்ல வசூலையே தமிழகத்தில் பெற்றுள்ளது.
அதிரடி முடிவு
இதற்கிடையே கோப்ரா திரைப்படத்தை தயாரித்த 7 ஸ்கிரீன் நிறுவனம் கோப்ரா திரைப்படத்தில் முக்கிய மாற்றத்தை செய்திருக்கிறது.
ஆம், கோப்ரா திரைப்படத்தில் 20 நிமிட காட்சிகளை நீக்கியுள்ளதாம். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்து நோட்டீஸ் வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.