உழவு வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில், 10 பெண் தொழிலாளர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துசம்பவம் பதுளை – பசறை – கோணக்கலை காவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கோணக்கலை தொழிற்சாலையில் பணியாற்றிய பெண் தொழிலாளர்கள், பணி நிறைவுற்றதும் நேற்றிரவு 7 மணி அளவில், தொழிற்சாலை உழவு வண்டியில் தங்களது வீடுகளுக்கு ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
இதன்போது, காவத்தைத் தோட்டத்திற்கு செல்லும் வழியில், குறித்த உழவு வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் சம்பவத்தில் காயமடைந்த 10 பெண் தொழிலாளர்கள், பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்