சீரியல் நடிகை மகாலட்சுமி சங்கரின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?

முன்னணி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் நடிகை மகாலட்சுமி சங்கர் ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில் மஹாலஷ்மியின் முதல் கணவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

மஹாலட்சுமி அனில் குமார் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மகன் ஒருவரும் உள்ள நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக, மஹாலட்சுமி கணவரை பிரிந்து தன்னுடைய அப்பா – அம்மா வீட்டிக்கு சென்றுவிட்டார்.

10 வருடம் ஒன்றாக வாழ்ந்த கணவருடன் விவாகரத்து
இதை தொடர்ந்து மஹாலட்சுமி தரப்பில் இருந்து, 10 வருடம் ஒன்றாக வாழ்ந்த கணவர் அனில் குமாருக்கு விவாரது நோடீஸ் அனுப்பியுள்ளனர்.

ஆனால் மகாலட்சுமியின் கணவர் அனைத்து பிரசிச்னையும் விரைவில் முடிவுக்கு வந்து விடும், என நினைத்து அவருடன் வாழ தயாராக இருந்தும் கணவரை விட்டு பிரிவதில் மஹாலட்சுமி பிடிவாதமாக இருந்துள்ளார்.

ஜெயஸ்ரீ சர்ச்சையில் சிக்கிய மஹாலக்ஷ்மி
அதன் பின்னர் தான் சீரியல் நடிகர் ஈஸ்வருடன் கள்ளக்காதல் கிசுகிசுவில் சிக்கினார்.

ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ மஹாலக்ஷ்மி மற்றும் ஈஸ்வர் ஒன்றாக எடுத்த புகைப்படங்கள் வீடியோ, சேட்டிங் போன்றவற்றை வெளியிட்டு பகீர் கிளப்பினார்.

இதற்கு மகாலக்ஷ்மி,ஈஸ்வர் தன்னுடைய நண்பர் என தொடர்ந்து கூறிவந்த நிலையில், இந்த பிரச்சனை சீரியல் வட்டாரத்தில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், ஒரு சிறு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க வந்த மஹாலட்சுமி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ சீரியலில் நடித்து வருகிறார்.

இரண்டாவது திருமணம்
கணவரிடம் இருந்து இவர் விவாகரத்து பெற்று இரண்டு வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது திடீர் என தயாரிப்பாளர் ரவீந்தரனை திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இவரகளது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.