காளான் சாப்பிடுவதால் ஏற்ப்படும் பக்கவிளைவுகளை அறிவீர்களா?

காளானில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரத சத்து முதல் பல்வேறு உயிர் சத்துக்கள் ஏராளமாக இதில் குவிந்து கிடைக்கின்றன.

இருப்பினும் காளான் சில பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

காளான் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படக் கூடும். எல்லோருடைய உடலும் இதை ஏற்றுக் கொள்ளாது.

காளான் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளில் மிக முக்கியமானது சரும அலர்ஜி ஆகும். சிலருக்கு காளான் சாப்பிட்டால் சருமத்தில் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

நாம் சாதாரணமாக உட்கொள்ளும் காளானில் இந்த அளவுக்கான போதை மனநிலை இருக்காது. ஆனால், காட்டில் விளையக் கூடிய காளான்களை சாப்பிடுவோருக்கு நிதானம் தவறுதல், தன்னிலை மறத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

பலர் காளான் சாப்பிட்ட பிறகு சோர்வாக காணப்படுவார்கள். சிலருக்கு உடனடியாக தூக்கம் வரும். நீங்கள் மிகவும் அசௌகரியமாக உணருவீர்கள். உங்கள் ஆற்றல் மிக, மிக குறைந்துவிடும்.