இவ் வருடத்தில் மட்டும் இரண்டு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்!

இந்தவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் ஜீ.எஸ்.யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு
அதில் பெரும்பலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரை அதிக எண்ணிக்கையிலானோர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

அதேநேரம், ஜப்பானிலும் பலருக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடக பேச்சாளர் ஜீ.எஸ்.யாப்பா தெரிவித்துள்ளார்.