தொடர்ந்து வசூல் வேட்டை நடாத்தும் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்
கார்த்தி, ஜெயராம், ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

கல்கியின் எழுத்தில் உருவான இக்கதையை மணி ரத்னம் பிரம்மாண்டமாக இயக்கியுள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி வெளியான இப்படம் கடந்த 9 நாட்களில் உலகளவில் சுமார் ரூ. 375 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.