சட்டவிரோத கடற்தொழிலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இச்செயற்பாடு காரணமாக மீனினம் முற்றாக அழிந்து விடும் என்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று (11.10.2022) கடற்தொழிலாளர் சங்கங்களுடன் கலந்துரையாடும் போதே இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில், கடற்தொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய்யை சீராக வழங்க, தற்போது இறக்குமதி செய்யப்படும் மண்ணெண்ணெய் போதுமானதாக காணப்படவில்லை.
எனவே மண்ணெண்ணெய்யை தனியார் இறக்குமதி செய்யவதற்கான அனுமதியை கோரியுள்ளோம்.
இந்த அனுமதி கிடைக்கப்பெறுமாயின் கடற்தொழிலாளர்களுக்கான மண்ணெண்ணெய் பிரச்சினையை தீர்க்க முடியும்.
கடற்தொழி
லாளர்களது நியாயமான கோரிக்கைகள்
கடற்தொழிலாளர்களது நியாயமான கோரிக்கைகள் கவனத்திற்கொள்ளப்பட்டு தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
இதன்போது திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பல கடற்தொழிலாளர் சங்கங்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
குறித்த கோரிக்கைகளை தமக்கு எழுத்து மூலம் வழங்குமாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மீன்பிடி திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்தொழில் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.