தேவையான பொருட்கள்
முட்டை – 1
சப்பாத்தி – 6
பெரிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை –
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளறி உதிரியாக வந்ததும் இறக்கி வைக்கவும். அடுத்து செய்து வைத்துள்ள சப்பாத்தியில் இந்த முட்டை பொரியலை நடுவில் சிறிது வைத்து சுருட்டவும். இப்போது சுவையான முட்டை ரோல் ரெடி. குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.