நடிகை லைலா
கன்னக் குழியழகி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை லைலா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடித்த பிதாமகன், தில், நந்தா, தீனா போன்ற படங்கள் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் திருமணம் ஆன பிறகு சினிமா பக்கம் வரவில்லை.
இப்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார், கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்திருக்கிறார்.
திருமணம்
இவர் 2006ம் ஆண்டு மேஹ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். தற்போது நடிகை லைலா தனது கணவர் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.