கனடாவின் கியூபெக் மாகாணத்தின் நாவல் நகரில் இடம் பெற்ற இரட்டை படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த படுகொலை சம்பவங்களுடன் உயிரிழந்த பதின்ம வயது சிறார்களின் தந்தை தொடர்புபட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
45 வயதான கமால்ஜீத் அரோரா என்ற நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை குறித்த நபரின் வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலைமையினால் இந்த படுகொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மால்ஜீத்தின் மனைவி ராமா ராணி அரோரா மீதும் குறித்த நபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
வீட்டு வன:முறை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் கமால்ஜீத் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் 11 வயதான சிறுவனும் 13 வயதான சிறுமியும் உயிரிழந்துள்ளனர் சம்பத்தின் போது படுகாயம் அடைந்த சிறார்கள் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு உயிர் ஆபத்து கிடையாது எனவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் கியூபெக் மாகாண முதல்வர் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்