ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபேட் ப்ரோ, ஐபேட் (10th Gen) போன்ற சாதனங்களை சமீபத்தில் அறிமுகம செய்தது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் புதிய ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புது ஐபோன் SE மாடல் அறிமுகம் பற்றியும், அதில் வழங்கப்பட இருக்கும் அம்சங்கள் பற்றியும் ஏற்கனவே பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த நிலையில், புதிய ஐபோன் SE மாடல் டிசைன் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி புதிய ஐபோன் SE 4 மாடல் தோற்றத்தின் அடிப்படையில் பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. புதிய ஐபோன் SE 4 டிசைன் பற்றிய புது தகவல்கள் மற்றும் ரெண்டர்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதில் புது ஐபோன் முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது அதிக மாற்றங்களை கொண்டிகருக்கும் என தெரியவந்துள்ளது.
ஐபோன் SE 4 மாடல்: ஸ்டார்லைட், மிட்நைட் மற்றும் பிராடக்ட் ரெட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக புதிய ஐபோன் SE மாடல் தோற்றத்தில் ஐபோன் XR போன்று காட்சியளிக்கிறது. இதுதவிர புதிய ஐபோன் SE மாடலில் 6.1 இன்ச் நாட்ச் வைத்த டிஸ்ப்ளே, ஒற்றை பிரைமரி கேமரா, பேஸ் ஐடி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய ஐபோன் SE சீரிஸ் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. சமீபத்தில் ஐபோன் SE 3 விலை இந்தியாவில் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன்படி ஐபோன் SE 3 விலை முன்பை விட ரூ. 6 ஆயிரம் அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ. 49 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது. புதிய ஐபோன் SE 4 விலை பிரீமியம் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யப்படும்.