எம்பரர் ஸ்டேட் இன பென்குயின் தான் உலகின் மற்ற பென்குயின்களை விட பெரியது என்றும் அவை 45 அங்குலம் வரை வளரும் எனவும் கூறப்படுகின்றது.
இந்த வகை பென்குயின் பெரும்பாலும் அன்டார்டிக்காவில் பனிக்கட்டி மற்றும் நீர் சூழ்ந்த இடங்களில்தான் அதிகம் காணப்படும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் எம்பரர் ஸ்டேட் பென்குயின்களை வளர்க்கும் ஒரு காப்பக்கத்தில் உள்ள பென்குயின்தான் தற்போது இணையத்தில் சுற்றிவருகிறது.
அதாவது பிறந்து வெறும் 97 நாள்களே ஆன, எம்பரர் ஸ்டேட் பென்குயின் ஒன்றின் எடையை அளவிட காப்பக்கத்தின் பணியாளர் ஒருவர் முயற்சித்துள்ளார்.
அந்த பென்குயினை எடை இயந்திரத்தில் ஏற்றி, எடையை சரிபார்ப்பதற்குள் அந்த பென்குயின், குடுகுடுவென ஓடிகிறது. அவர் பலமுறை முயன்றும் அந்த பென்குயின் ஒரே இடத்தில் நிற்க மறுக்கிறது. நீண்ட போராட்டத்திற்கு பிறகுதான், அதன் எடையை அளவிட முடிந்தது.
இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், ஒருவர்,”எம்பரர் பென்குயின், வாழும் அனைத்து பென்குயின் இனங்களில் மிக உயரமான மற்றும் அதிக எடைக்கொண்டது.
ஒரு வயதான பென்குயின் 122 செமீ & 30 கிலோ வரை இருக்கும். 97 நாட்களே ஆன இந்த குட்டி பென்குயின், 14.1 கிலோவில் உள்ளது. இது மிக இலகுவான, பஞ்சுபோன்ற சிறப்புமிக்க இறகுகளைக் கொண்டது” என பதிவிட்டுள்ளார்.
எம்பரர் பெங்குவின்கள், அன்டாடிகாவின் நீண்ட குளிர்காலத்தை, திறந்த பனியில் கழிக்கும். மேலும் இந்த கடுமையான பருவத்தில் கூட அவை இனப்பெருக்கம் செய்கின்றன. பெண்கள் ஒற்றை முட்டையை மட்டுமே இடும். பின்னர் உடனடியாக அதை விட்டுவிட்டுச் சென்றுவிடும் என கூறப்படுகிறது.
தொடர்ந்து, அவை சுமார் இரண்டு மாதங்களுக்கு வேட்டைக்கான பயணத்தில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.