பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான விடுதி ஒன்றில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்று வந்த பண்டாரகம பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய மாணவனே நேற்று (21-10-2022) காலை உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான சிங்கராஜா விடுதியில் தங்கி படித்த ஹர்ஷ தனஞ்சய என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.