அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் 45 இலங்கையர்களை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவுஸ்திரேலியா நோக்கி படகில் செல்வதற்காக உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகலிடம் கோரிய 183 இலங்கை பிரஜைகளை அவுஸ்திரேலியா அண்மையில் திருப்பி அனுப்பியுள்ளது.
“இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவை அடைய சுமார் 21 நாட்கள் ஆகும்.அவுஸ்திரேலியாவை அடைய விரும்பும் கடல்வழி மக்கள் கப்பல்களை கடத்துவதை நாங்கள் நிறுத்துவோம், மேலும் கப்பலில் உள்ளவர்களை அவர்கள் புறப்படும் இடம் அல்லது பிறப்பிடத்திற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவோம் அல்லது தேவைப்பட்டால், அவற்றை ஒரு பிராந்திய செயலாக்க நாட்டிற்கு மாற்றுவோம், ”என்று ஆஸ்திரேலிய அதிகாரி கூறியுள்ளார்.