வெளியேறிய ஜி.பி.முத்து
பிக் பாஸ் சீசன் 6ல் வலிமையான போட்டியாளர்களில் முக்கியமான ஒருவர் ஜி.பி.முத்து. இவர் கடந்த சில நாட்களாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார்.
எத்தனை முறை சமாதானம் செய்தும் அவர் கேட்கவில்லை. இதனால், அவருடைய விருப்பப்படி நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் ஜி.பி. முத்து.
அவர் மேல் ரசிகர்கள் வைத்திருந்த நம்பிக்கை உடைந்துபோயிருந்தாலும், அவர் தன்னுடைய மகனை பார்க்க தான் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார் என தெரிகிறது.
மருத்துவமனையில் மகன்
இந்நிலையில், ஜி.பி. முத்துவின் மகன் விஷ்ணு தற்போது மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட ஜி.பி. முத்துவின் மகன் விஷ்ணுவின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
விரைவில் விஷ்ணு குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..