ஈரானிய மக்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கனேடிய மக்கள்

ஈரானிய மக்களுக்கு ஆதரவினை வெளியிட்டு கனடாவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஈரானிய – கனேடிய அமைப்புக்கள் என்பன கூட்டாக இணைந்து இந்தப் போராட்டங்களையும், பேரணிகளையும் முன்னெடுத்துள்ளன.

றொரன்டோ, வின்னிபிக், ஹாலிபிக்ஸ், மொன்ட்ரியல் உள்ளிட்ட கனடாவின் அநேக பகுதிகளில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஈரானிய அரசாங்கம் மாற்றுக் கொள்கைகளை பின்பற்றுவோருக்கு எதிராக கடுமையான அடக்குமுறைகளை பின்பற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அண்மையில் மாஷா அம்னி என்ற 22 வயது யுவதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹிஜாப் உரிய முறையில் அணியத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த யுவதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டு கனடாவில் அதிகளவான இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானிய அரசாங்கம் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறைகளை பின்பற்றி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த அடக்குமுறைகளை எதிர்த்தும், ஈரானிய மக்களின் போராட்டங்களை ஆதரித்தும் கனடா முழுவதிலும் ஆயிரக் கணக்கான மக்கள் போராட்டங்களையும் பேரணிகளையும் நடாத்தி வருகின்றனர்.