சக்திவாய்ந்த M2 சிப் கொண்ட மேக் ப்ரோ விரைவில் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் விரைவில் புதிய மேக் ப்ரோ மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. புதிய மேக் ப்ரோ மாடலில் 48 CPU கோர் கொண்ட பிராசஸர் வழங்கப்படும் என மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார். இது M2 மேக்ஸ் பிராசஸரை விட சக்திவாய்ந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய மேக் ப்ரோ மாடல்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

மேக் ப்ரோ அறிவிக்கப்படும் முன் 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ, மேக் மினி மாடல்கள் அப்டேட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆப்பிள் நிறுவனத்தின் உயர் ரக லேப்டாப் மாடல்கள் புதிய M2 ப்ரோ மற்றும் M2 மேக்ஸ் பிராசஸர்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. மேக் மினி மாடலில் M2 சிலிகான் பிராசஸரே வழங்கப்படும். இதே பிராசஸர் 2022 மேக்புக் ஏர் மாடலில் வழங்கப்பட்டு இருக்கிறது.

சமீபத்தில் ஆப்பிள் புதிய தலைமுறை ஐபேட் ப்ரோ மாடலை M2 சிப்செட் உடன் அறிமுகம் செய்தது. இத்துடன் புதிய ஆப்பிள் பென்சில், அதிவேக வயர்லெஸ் கனெக்டிவிட்டி, உலகின் அதிநவீன மொபைல் டிஸ்ப்ளே, ப்ரோ கேமரா, பேஸ் ஐடி, தண்டர்போல்ட், நான்கு ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.