வேற்றுகிரகவாசியை காரினுள் பார்த்ததும் அதிர்ந்து போன கூகுள் எர்த் பெண் பயனாளர்

காரின் பின் இருக்கையில் வேற்று கிரகவாசியை ஜூம் செய்து பார்த்து அதிர்ந்தேன் என கூகுள் எர்த் பெண் பயனாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

உலக விசயங்களை பற்றி தெரிந்து கொள்வதற்கு பத்திரிகைகளின் பயன்பாடு அளப்பரியது என்ற நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சி அதனை மேம்படுத்தியது.

இதனால், வானொலி, தொலைக்காட்சி, கணினி என அடுத்தடுத்து அறிவியல் முன்னேற்றத்தின் பயனாக தற்போது, உலக விசயங்களை அறிந்து கொள்வது எளிமையாகி உள்ளது.

இதேபோன்று, உலகின் எந்த பகுதியையும் முப்பரிமாண பிரதிபலிப்புடன் செயற்கைக்கோள் புகைப்படங்களாக பார்ப்பதற்கு கூகுள் எர்த் என்ற கூகுள் நிறுவன சேவை பயனளிக்கிறது.

இதில், வெறும் கண்களால் நாம் பார்க்க இயலாத, நமது பார்வைக்கு புலப்படாத விசயங்களை தெளிவாக தெரிய செய்யும் வகையில் அதன் அம்சம் உள்ளது. ஒரு நிலப்பகுதியின் புகைப்படங்களையும் முப்பரிமாணத்தில் நாம் காண முடியும்.

இதனை பலரும் வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகின்றனர். சில விசித்திர விசயங்களையும் இதன் உதவியுடன் பலர் தெரிந்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் கிறிஸ்டல் பேட்டர்சன், அவருக்கு 45 வயதாகிறது,. அமெரிக்காவின் மெய்னி என்ற பகுதியில் மேப்பிள் நகரில் வாகனங்களை பழுது பார்க்கும் கடையின் விற்பனை பற்றி தெரிந்து கொள்ள கூகுள் எர்த் சேவையில் தேடி வந்துள்ளார்.

இதில் அவருக்கு ஆச்சரிய தகவல் ஒன்று கிடைத்து உள்ளது. அதுபற்றி பேட்டர்சன் கூறும்போது, வாகன பழுதுபார்க்கும் கடையை தேடியபோது, அந்த இடத்தில் கார் நின்றிருந்தது. அதில், காரின் ஓட்டுனர் ஆடைகளின்றி நிர்வாண நிலையில் காணப்பட்டார்.

ஒரு வேளை பின்னால் உள்ள உருவத்துடன் திரிந்து, அப்படி தெரிந்து இருக்கலாம் என நினைத்தேன். அதனால், ஜூம் செய்து (பெரிதுப்படுத்தி) உண்மை என்னவென தெரிந்து கொள்ளலாம் என பார்த்தேன்.

ஏனெனில், அடுத்தவர் விசயத்தில் என்னவென்று? மூக்கை நுழைத்து பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆனால், கார் ஒன்றின் பின் இருக்கையில் ஏதோ ரகசிய வேலைக்காக, வேற்று கிரகவாசி ஒன்று பதுங்கியிருந்தது.

அதனை ஜூம் செய்து பார்த்தேன். காரின் பின்னால், வேற்று கிரகவாசியின் முகம் தெரிந்து, அதிர்ச்சியில் உறைந்து போனேன் என கூறியுள்ளார். காரின் பின் இருக்கையில் நான் பார்ப்பது என்னவென்று யாரேனும் கூற முடியுமா? என்றும் அவர் கேட்டுள்ளார்.

கூகுள் எர்த்தில் எப்படி இதனை கண்டறிந்தீர்கள்? என ஒருவரும், தெளிவாக அது ஒரு வேற்றுகிரகவாசியே என மற்றொருவரும் தெரிவித்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், பசிபிக் பெருங்கடலின் மேல் பறந்து செல்லும்போது, வேற்று கிரகவாசிகள் பலர் அந்த பகுதியில் தென்பட்டனர் என பல்வேறு விமான நிறுவனங்களில் பணிபுரிந்த விமானிகள் பலர் தெரிவித்து இருந்தனர்.

வேற்று கிரகவாசிகளை பற்றிய தேடல் தொடர்ந்து நீண்டு வரும் சூழலில், பேட்டர்சனின் இந்த கண்டுபிடிப்பு, மேப்பிள் நகர சமூக ஊடகவாசிகள் இடையே வேற்று கிரகவாசி பற்றிய விவாதத்தில் சூடு கிளப்பி உள்ளது.