பிக்பாஸ் 6வது சீசன்
கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க வெற்றிகரமாக பிக்பாஸ் 6வது சீசன் ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டது, இதில் இருந்து மக்கள் மிகவும் நம்பிய ஜி.பி.முத்து அவராகவே வந்து வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றார்.
அதோடு முதல் போட்டியாளராக வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சாந்தி.
இந்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் மக்கள் விரும்பிய சில போட்டியாளர்கள் இருக்கிறார்கள், இதில் இருந்து யார் வெளியேறுவார் என்பது தெரியவில்லை, ஆனால் ஓட்டிங் விவரம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
எலிமினேட் ஆகப்போவது யார்
இந்த வாரம் எலிமினேஷனுக்காக ரச்சிதா, ஜனனி, அசல், மகாலட்சுமி, ஆயிஷா, அசீம், ஏடிகே என 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதில் இப்போது வரை குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பது அசல்.
இவர் மீது கடந்த சில நாட்களுக்கு மக்களுக்கு கோபம் தான் ஏற்பட்டுள்ளது, பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டு எழும்ப, அவருக்கு வாக்குகளும் குறைவாக வந்துள்ளது.