கார்த்தியின் சர்தார் பட வசூல் நிலவரம்!

சர்தார்
கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் சர்தார். இரும்பு திரை, ஹீரோ ஆகிய படங்களை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், ராஷி கன்னா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வசூல் வேட்டை
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில், உலகளவில் இப்படம் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. அதே போல் தமிழகத்தில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.