டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்காள தேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளது. 6 அணிகளும் இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளனர்.
இந்தியா 4 புள்ளிகள், தென் ஆப்பிரிக்கா 3, ஜிம்பாப்வே 3, வங்காளதேசம் 2, பாகிஸ்தான் நெதர்லாந்து அணிகள் புள்ளிகள் எதும் எடுக்காமல் கடைசி இரண்டு இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு மங்கி உள்ளது.
பாகிஸ்தான் அரை இறுதி சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் முதலில் வங்கதேசம், தென்னாபிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளில் வெல்வது கட்டாயமாகியுள்ளது. அதே சமயம் -0.050 என்ற மோசமான நிலையில் இருக்கும் அந்த அணியின் ரன்ரேட்டை உயர்த்துவதற்கு அந்த 3 வெற்றிகளும் பெரிதாக இருந்தால் இன்னும் உதவிகரமாக இருக்கும். மேலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா தன்னுடைய எஞ்சிய 3 போட்டிகளில் நிச்சயம் வென்றாக வேண்டும்.
இந்தியா 1 போட்டியில் தோற்றால் கூட தன்னுடைய 3 போட்டிகளில் பாகிஸ்தான் வென்றால் பயனளிக்காது. 3. அத்துடன் தன்னுடைய 2 போட்டிகளில் முடிவில் 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா தன்னுடைய கடைசி 3 போட்டிகளில் குறைந்தது 2 தோல்விகளை சந்திக்க வேண்டும். அதே போல் 3வது இடத்தில் இருக்கும் ஜிம்பாப்வே தன்னுடைய கடைசி 3 போட்டிகளில் 2 போட்டிகளில் கண்டிப்பாக தோற்க வேண்டும்.
இவை அனைத்தும் மிராக்கள் நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிற்கு செல்லும் வாய்ப்புள்ளது. ஆனால் வரலாற்றில் ஆஸ்திரேலியா மண்ணில் இதுவரை ஒட்டுமொத்தமாக பங்கேற்ற 6 டி20 போட்டிகளில் 5 தோல்விகளை பதிவு செய்துள்ள பாகிஸ்தான் 1 வெற்றியை கூட பதிவு செய்ததில்லை என்பது இந்த உலகக் கோப்பையில் அந்த அணிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்காது என்பதை ஆரம்பத்திலேயே உணர்த்துகிறது.