இசையமைப்பாளர் ரகுராம் உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார்.
ஒரு கிடாயின் கருணை மனு என்ற தமிழ் படத்திற்கு ரகுராம் இசையமைத்து இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருந்தார்.
இளம் இசை அமைப்பாளரான ரகுராம் 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே Geneti நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
ஒரு மாதம் உயிர் வாழ இத்தனை லட்சம் செலவா?
இதற்காக அவர் பல ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
குறிப்பாக அவர் ஒரு மாதம் உயிர் வாழ, மாதம் 10 லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நேற்று அவருக்கு தீவிர உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி ரகுராம் உயிரிழந்தார். இந்த தகவல் கடும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.