ஐகூ நிறுவனம் சீன சந்தையில் புதிய ஐகூ 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யும் என தகவல் வெளியாகி உள்ளது. ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன்கள் ஐகூ 11 சீரிசில் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் இந்திய சந்தையில் ஐகூ 10 பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.
கடந்த மாதம் வெளியான தகவல்களில் ஐகூ 11 மற்றும் ஐகூ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் முறையே V2243A மற்றும் V2254A மாடல் நம்பர்களை கொண்டிருப்பதாக கூறப்பட்டது. இவற்றின் இந்திய வேரியண்ட் I2209 மற்றும் I2212 மாடல் நம்பர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இதில் I2209 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் IMEI டேட்டாபேஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் ஐகூ 10 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. சீனாவில் அறிமுகம் செய்யப்படும் ஐகூ 11 மாடல் இந்திய சந்தையில் ஐகூ 10 பெயரில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. முன்னதாக ஐகூ நிறுவனம் இந்தியாவில் ஐகூ 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.
இதில் ஐகூ 9 SE, ஐகூ 9 மற்றும் ஐகூ 9 ப்ரோ என மூன்று மாடல்கள் இடம்பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாத வாக்கில் ஐகூ 9T ஸ்மார்ட்போனினை ஐகூ அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஐகூ 9T ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் விற்பனை செய்யப்படும் ஐகூ 10 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய ஐகூ 10 மாடலில் 6.78 இன்ச் AMOLED E6 FHD+ டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்பி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு சார்ந்த ஒரிஜின் ஒஎஸ், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.