அசலை போன்று பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறும் மற்றுமோர் போட்டியாளர்

அசல் கோளாறு
பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வார இறுதியில் அசல் கோளாறு எலிமினேட் செய்யப்பட்டார். அவர் வீட்டில் பல பெண்களை அனுமதி இல்லாமல் தொடுவது உள்ளிட்ட பல விஷயங்களை செய்தது சர்ச்சை ஆன நிலையில் எலிமினேட் செய்யப்பட்டார்.

அவர் வெளியே போனதற்கு நிவாஷினி தான் கதறி கதறி அழுதார். அதை பார்த்து நெட்டிசன்களும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

அசல் போல எல்லைமீறும் இன்னொரு போட்டியாளர்
இந்நிலையில் தற்போது அசல் செய்த அதே வேலையை இன்னொரு போட்டியாளர் தொடங்கி இருக்கிறார். ராம் ராமசாமி தான் அது.

அவர் ஜனனியிடம் எல்லைமீறும் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.