தியதலாவை நகரிலுள்ள மதுபானசாலையொன்றில், இராணுவ சிப்பாய்கள் மூவர் 5 ஆயிரம் ரூபா போலி நோட்டை கொடுத்து மதுபானம் வாங்கிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம், போலி நோட்டை அச்சிட்ட சிப்பாயை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கணனி மற்றும் பிரிண்டரை பயன்படுத்தி போலி நோட்டு
பயிற்சி பாடசாலை அலுவலகத்தில் கடமையாற்றும் சிப்பாய் அங்குள்ள கணனி மற்றும் பிரிண்டரை பயன்படுத்தி போலி நோட்டுக்களை அச்சிட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிப்பாயை கைது செய்து மேற்கொண்ட விசாரணைகளில் இரண்டு போலி நோட்டுகளை மாத்திரமே அச்சிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் போலி நோட்டை அச்சிட்ட சிப்பாயையும் மதுபானம் வாங்க சென்ற மூன்று சிப்பாய்களையும் நீதிமன்ற உத்தரப்பின்படி எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.