மனைவி தீ வைத்து கொண்டமையால் உயிரை மாய்த்துக் கொண்ட கணவன்

மொனராகலையில் மனைவி தீ வைத்து கொண்டமை தொடர்பில் தகவல் அறிந்து கொண்ட கணவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

படல்கும்புர பிரதேசத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறியடுத்து கணவர் வீட்டை விட்டு வெளியேறியவுடன் மனைவி உடல் முழுவதும் தீ வைத்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

கணவனின் விபரீத முடிவு
இதனை அறிந்து கொண்ட கணவன் வயிற்றில் கத்தியால் குத்திக் கொண்ட நிலையில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் நேற்று காலை உயிரிழந்துள்ளதாக படல்கும்புர பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் படல்கும்புரா, மதுகஹாபட்டியாவில் வசிக்கும் 57 வயதான ஆர்.எம். நந்தசேன என்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.

அயலவர்கள் உதவி

தீக்குளித்த அவரது மனைவி 56 வயதுடைய மல்லிகா என்பவர் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 31ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கடந்த 29ம் திகதி இரவு கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற மனைவி மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

குறித்த இருவரையும் அயலவர்களால் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

படல்கும்புர பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.