வவுனியாவில் இடம் பெற்ற விபத்தில் சாரதி மற்றும் பெண் உட்பட மூவர் உயரிழ்ந்ததாக செய்திகள் வெளியாகியது.
இதில் உயிரிழந்த பேரூந்து சாரதியான சிவபாலன் சிவரூபன் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
அச் சாரதி உடுப்பிட்டியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது.
அத்தோடு இவர் கிராமத்தின் பல்வேறு சமூக, சமய செயற்பாடுகளில் முன்னின்று செயற்படுபவராகவும் சமூக செயற்பாடுகளூடாக கிராம மக்களின் பேரன்புக்கு உரியவராகவும் கடின உழைப்பாளியாகவும் திகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவரின் திடீர் மறைவு உடுப்பிட்டி வாழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.