கொரோனா ஏற்படுத்தி இருக்கும் பீதியால் நிறைய பேர் அத்தியாவசிய பொருட்களை அதிகமாக வாங்கி சேமித்து வைக்கிறார்கள். அவை கெட்டுப்போகாமல் இருப்பதற்காக பிரிட்ஜிலும், அதிலிருக்கும் பிரீசரிலும் அடுக்கிவைக்கிறார்கள். பிரிட்ஜில் இருக்கும் ‘ரேக்குகளை’ விட உள்பகுதியில் இருக்கும் பிரீசரில் குளிர்ச்சி தன்மை அதிகமாக இருக்கும் என்பதால் அதில் விரைவாக கெட்டுப்போகும் பொருட்களை சிலர் பாதுகாப்பாக வைக்கிறார்கள்.
அப்படி எல்லா பொருட்களையும் பிரீசரில் வைக்கக்கூடாது. பால், பால் சார்ந்த பொருட்கள் சட்டென்று கெட்டுவிடும் என்பதற்காக அதை பிரீசரில் வைப்பது தவறானது. ஏனெனில் அவை குளிர்ந்து உறைந்துபோய்விடும். பாலை அதில் வைத்து எடுத்து காய்ச்சினால் உருகிபோய்விடும். பால் பொருட்களை பிரீசரில் வைப்பதால் அதன் ஆயுள் அதிகரிக்காது. பழங்களை பிரீசரில் வைக்கக்கூடாது.
அப்படி வைத்தால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து மதிப்பு குறைந்துபோய்விடும். பழங்களின் மேல் பகுதியும், சுவையும் மாறி போய்விடும். உலர் பழவகைகளை வேண்டுமானால் பிரீசரில் வைக்கலாம். தக்காளி, மிளகாய் போன்ற சாஸ் வகைகளை பிரீசரில் வைக்கக்கூடாது. அதில் கலந்திருக்கும் மூலப்பொருட்களெல்லாம் தனித்தனியாக பிரிந்துவந்துவிடும். பாக்கெட்டில் இருந்து எடுத்து பயன்படுத்திய காபி தூளை பிரீசரில் வைக்கக்கூடாது. அதன் சுவையும், மணமும் குறைந்துபோய்விடும். உபயோகிக்காத காபி தூள் பாக்கெட்டை இரண்டு வாரம் வரை பிரீசரில் வைத்துக்கொள்ளலாம். நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் பிரீசரில் வைத்து பயன்படுத்தக்கூடாது.
அது குளிர்ந்து போய் மென்மை தன்மைக்கு மாறி போய்விடும். அதன் ருசியும் மாறுபட்டுவிடும். வெள்ளரிக்காயை பிரீசரில் வைத்து சாப்பிடக்கூடாது. அதன் சுவையும், ஊட்டச்சத்து தன்மையும் மாறிப்போய்விடும். கண்களுக்கு பயன்படுத்துவதாக இருந்தால் பிரீசரில் வைத்துக்கொள்ளலாம். வறுத்த உணவு தானியங்களை பிரீசரில் வைக்கக்கூடாது. அவற்றின் மொறுமொறு தன்மையும், சுவையும் குறைந்துபோய்விடும்.
கீரை வகைகளை பிரீசரில் வைத்து பயன்படுத்தலாம். அவற்றின் தன்மை மாறாது. காலிபிளவரில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும். கலோரிகளும் குறைவு. அதனை பிரீசரில் வைத்து பயன்படுத்தலாம். அதன் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படாது. குடைமிளகாயில் ஆன்டிஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளது. அதனையும் பிரீசரில் வைத்து உபயோகப்படுத்தலாம். உணவுமு