மாணவர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மில்லனிய குங்கமுவ கனிஷ்ட வித்தியாலயத்தின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாடசாலை அதிபர் மாணவர்கள் ஆசிரியையின் பணப்பையை திருடியதாக கூறி கொடூரமாக தாக்கி உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் திணைக்கள ரீதியில் விசாரணை நடத்தப்படும் என மேல் மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த அதிபர் மற்றும் மில்லனிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா நேற்று உத்தரவிட்டுள்ளார்.