ஆற்றில் நீராடச் சென்ற இரு சிறுவர்கள் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது காலி பொலிஸ் வலயத்திற்குட்பட்ட கிங்தொட்ட பிரதேசத்திலுள்ள ‘கிங்கங்கை’ ஆற்றில் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் கடந்த 5 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது.
இவர்களில் நீராடச் சென்ற நான்கு பேரில் 14 மற்றும் 15 வயதுகளுடைய இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மொறகொட மற்றும் காலியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிங்கங்கை ஆற்றுக்கு நீராடச் சென்றிருந்த நால்வரில் ஒருவர் கிங்தொட்ட பிரதேசத்தை சேர்ந்தவராவர்.
சம்பவம்
அவரின் வீட்டுக்கு வந்திருந்த நண்பர்கள் மூவருடன் கிங்கங்கை ஆற்றுக்கு நீராடச் சென்றிருந்தவேளையில் குறித்த இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரதேச மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு தற்போது காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.