ஸ்வீட் கடை டாஸ்க்
பிக் பாஸ் ஷோ கடந்த சில தினங்களாக சுவாரஸ்யம் இல்லாமல் ரொம்ப நார்மலாக தான் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது வீட்டில் யாருமே எதிர்பார்க்காத ஒரு பெரிய சண்டை வெடித்து இருக்கிறது.
போட்டியாளர்களுக்கு தற்போது ஸ்வீட் கடை டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. இரண்டு அணிகளாக பிரிந்து இரண்டு ஸ்வீட் கடைகள் நடத்தவேண்டும் என்பது டாஸ்க். அதற்கான பொருட்கள் கன்வேயரில் வரும்போது அதை எடுக்க போட்டிபோட்டுக்கொண்டு செல்கிறார்கள்.
மணி – தனலட்சுமி சண்டை
தனலட்சுமி கையில் எடுத்த பொருளை அவர் பின்னால் நின்றுகொண்டிருந்த மணிகண்டன் மல்லுக்கட்டி அவரிடம் இருந்து பிடிங்குகிறார். அப்போது தனலட்சுமியை மணி கீழே தள்ளிவிட்டு பிடிங்கி செல்கிறார்.
இது பற்றி இருவருக்கும் கடும் சண்டை வெடித்திருக்கிறது. இருவரும் மோதிக்கொள்ள அருகில் இருந்த மற்ற போட்டியாளர்கள் தடுக்கிறார்கள்.
ப்ரொமோ வீடியோவில் நீங்களே பாருங்க..