அதிசொகுசு பயணிகள் கப்பல் ஒன்று, கொழும்பு துறைமுகத்திற்கு வருகைத் தந்துள்ளது. Viking Mars என்ற கப்பலே இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
900 பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு
இலங்கைக்கான கடற்கரைப் பயணத்துக்கான அதிக பயணக் கப்பல்களைக் கையாளும் முன்னணி இலக்கு நிர்வாக நிறுவனமான Aitken Spence Travels, அமெரிக்காவின் முதலாவது சொகுசு பயணிகள் பயணக் கப்பலான வைகிங் மார்ஸ், தொற்றுநோய்க்குப் 900 பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலில் வந்த பயணிகளின் உல்லாசப் பயணங்களின் போது கண்டி, பின்னவெல, காலி நகரப் பயணங்கள், கொழும்பில் நடைப் பயணம், முத்துராஜவெல மற்றும் மடு ஆற்றில் படகுச் சுற்றுலா, விவசாயக் கிராமக் கருத்து, துக்-துக் சுற்றுப்பயணங்கள், கலாசார நிகழ்ச்சிகள், சமையல் அனுபவங்கள், கலை மற்றும் கட்டிடக்கலைச் சுற்றுலா போன்றவற்றைப் பார்வையிடுவார்கள்.
“எங்கள் ஆற்றல் மிக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள குழு கடந்த 12 மாதங்களில் இந்த பயண அழைப்புகளைப் பெற மிகவும் கடினமாக உழைத்ததாக Aitken Spence Travels இன் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் ஜயசுந்தர தெரிவித்தார்.