அதிகளவான உப்பை எடுத்துக் கொள்வதால் ஏற்ப்படும் ஆபத்துகள்

அதிகளவான உப்புகளை உண்ணும் போது மூளை, இதயம், இரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகள் சேதமடையும் என்று கூறப்படுகின்றது.

அதிக உப்பு சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு, ஒரு கட்டத்தில் சீர் செய்ய முடியாத அளவு மோசமாகிவிடும் என்று கூறப்படுகின்றது.

அதிக உப்பு உட்கொள்வது மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று கார்டியோவாஸ்குலர் ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

பல்கலைக்கழகம் ஒன்றை சேர்ந்த விஞ்ஞானிகள் குறைந்த உப்பு உணவை சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது ​​​​அதிக உப்பு உணவை உண்பவர்களுக்கு மன அழுத்த ஹார்மோன் அளவுகளில் 75 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டதாகக் கண்டறிந்தனர்.

ஆய்வில் பெரும்பாலான மக்கள் தினமும் ஒன்பது கிராம் உப்பை உட்கொள்கின்றனர் (பரிந்துரைக்கப்பட்ட தினசரி சோடியம் உட்கொள்ளல் ஆறு கிராமுக்கு குறைவாக உள்ளது) என்பதும் தெரியவந்துள்ளது.

அதிக உப்பை சாப்பிடுவதால் மூளை மட்டுமல்ல, இதயம், இரத்த நாளங்கள் மற்றும் சிறுநீரகங்கள் போன்ற பிற உறுப்புகளும் சீர்குலைகின்றன.

அபாயம்

அதிக உப்பு சாப்பிடுவது இரத்த அழுத்தம் அத்கரிக்க காரணம் ஆகலாம். இது இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

அதிக உப்பு கொண்ட உணவு எடை அதிகரிப்புடன் தொடர்புள்ளது, ஏனெனில் சோடியம் உடலில் அதிக தண்ணீரைத் தக்கவைக்க காரணமாகிறது. இது பல ஆரோக்கிய குறைபாடுகளை ஏற்படுத்தும்.

அதிகப்படியான உப்பு உட்கொள்வது தூக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் முக்கியமாக இரத்த அழுத்தம் அதிகரிப்பு மற்றும் மன அழுத்தம் அதிகமாகும் என்று கூறப்படுகின்றது.

அதிகப்படியான சோடியம் இரத்த அழுத்த அளவை அதிகரிக்கிறது, மேலும் இது காலப்போக்கில் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் மற்றும் சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். அதிகப்படியான உப்பு உட்கொள்ளல் சிறுநீரக கற்களையும் அதிகரிக்கும்.

அதிகப்படியான சோடியம், சிறுநீரில் கால்சியம் வெளியேற்றத்தை அதிகரிப்பதால், அதிக உப்பு நிறைந்த உணவுகளை உண்பவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்கு ஆளாக நேரிடும்.