மூளையையும் இதயத்தையும் இளமையாக வைத்திருக்க உதவும் உணவுகள்

மனிதன் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக வாழ சரிவிகித உணவுகளும், தொடர்ச்சியான உடற்பயிற்சியும் அவசியம்.

நாம் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்கிறோமோ அதுவே நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்குவகிக்கிறது.

ஏனெனில் நாம் உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றன.

இந்த பதில் மூளை மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தேவையான வைட்டமின்கள் பற்றியும், அது எந்த உணவுகளில் அதிகம் இருக்கிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்

வைட்டமின் பி ஏன் அவசியம்?
மூளை ஆரோக்கியாக இருக்க வைட்டமின் பி அவசியம், இதில் எட்டு வகைகள் உண்டு.

வைட்டமின் பி1 (தயாமின்)
வைட்டமின் பி 2 (ரிபோஃப்ளேவின்)
வைட்டமின் பி 3 (நியாசின்)
வைட்டமின் பி5 (பேண்டோதெனிக் அமிலம்)
வைட்டமின் பி-9 எனும் ஃபோலிக் ஆசிட்
வைட்டமின் பி-12 அல்லது கோபாலமின்
வைட்டமின் பி-6 (பைரிடாக்சின்)
வைட்டமின் பி7 (பயோடின்)
நம் உடலின் அடிப்படையான உயிரணுக்களின் செயல்பாடுகளுக்கு உதவும் வைட்டமின் பி, இதயத்திற்கும் பாதுகாப்பளிக்கும்.

எந்தெந்த உணவுகளில் இருக்கிறது?
பீன்ஸ் கொட்டைகள்

மூளைக்கு தேவையானதை வழங்குவதில் முதலிடம் வகிப்பது பீன்ஸ், மூளை ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நினைவாற்றல், சிந்திக்கும் திறன், கற்றுக்கொள்ளுதல் போன்றவை சீராக இருக்கும். புரோட்டீன்கள், தாதுக்கள் அதிகம் நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்புகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மூளையின் ஆரோக்கியம் மேம்படுகிறது.

பச்சை இலைக்காய்கறிகள்

வைட்டமின் பி உட்பட நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் பச்சைஇலைக்காய்கறிகளில் நிறைந்திருக்கின்றன, வாரத்திற்கு இருமுறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் மட்டுமின்றி பல நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

தயிர்
தினமும் தயிர் எடுத்துக்கொள்வதால், வைட்டமின் பி 12 மட்டுமின்றி கால்சியம், வைட்டமின் டி மற்றும் நன்மை தரும் பக்டீரியாக்களை பெறலாம். இதனால் எலும்பு, பற்களின் பலம், குடலின் ஆரோக்கியம் மேம்படும்.

முட்டை

மீன், மட்டன் போன்ற அசைவ உணவுகளை காட்டிலும் வைட்டமின் பி12 முட்டையில் குறைவு என்றாலும், தினமும் முட்டை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது, இதில் புரோட்டீன் நிறைந்திருப்பதால் தாராளமாக அனைவரும் சாப்பிடலாம். கொழுப்பு குறைந்த பாலை சிறிது கலந்து முட்டை எடுத்துக்கொள்வதும் வைட்டமின் பி 12ன் அளவை அதிகரிக்கும்.

சால்மன் மீன்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்ட சால்மன் மீனில் வைட்டமின் பி நிறைந்துள்ளது.