ஆன்ட்ரைட் அலைபேசிகளில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கும் செயலி காணப்படும்.
எனினும், செட்யுல் ( schedule) செய்யவும், அவசரம்(Urgent) என்ற குறியீட்டுடன் குறுஞ்செய்திகளை அனுப்பும் போதும் கூகுள் மெஸேஜ் உதவியாக அமையும்.
சில செயலிகளில் இந்த வசதி காணப்பட்டாலும் பலருக்கு இது பற்றிய விளக்கம் கிடையாது.
இந்த குறுஞ்செய்திகளை பெறுனர் முதலில் படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
என்ன விடயம் என்பது பற்றிய தலைப்பினையும் இட்டு அலுவலக பயன்பாட்டு செய்தி வடிவில் இதனை அனுப்பி வைக்க முடியும்.
கூகுள் மெஸேஜ் செயலியில் அவசர குறுஞ்செய்திகளை பரிமாறிக் கொள்வதற்கு அனுப்புனரும் பெறுனரும் ஆன்லைனில் இருக்க வேண்டுமென்பது அவசிமாகின்றது.
எவ்வாறு கூகுள் மெஸேஜ் செய்வது?
1. உங்களது ஆன்ட்ரைட் அலைபேசியில் கூகுள் மெஸேஜ் செயலியை திறக்கவும்
2. recipient’s conversation பகுதிக்குச் சென்று யாருக்கு அவசரமாக செய்தி அனுப்ப வேண்டும் என்பதனை தெரிவு செய்க
3. three-dot menu ஐ டெப் செய்யவும் இது வலதுபக்க மூலையில் காணப்படுகின்றது.
4. அதில் Show subject field என்பதனை தெரிக
5. உங்கூகளது message boxல் subject line என்ற பகுதி தோன்றும்
6. subject field line பகுதியில் urgent message செக் பொக்ஸ் தோன்றும்
7. அதில் urgent என்பதனை தெரிவு செய்க, தேவையான செய்தியை தட்டச்சு செய்யவும்
8. இறுதியாக Send பட்டனை அழுத்தவும் கூகுள் நிறுவனம் தனது மெஸேஜிங் செயலியை தொடர்ந்தும் அப்டேட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.