நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் எப்படி இருக்கிறார். உண்மையில் மருத்துமனையில் தான் இருக்கிறாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் சமந்தா?
மயோசிடிஸ் எனும் அரிய வகை நோயுடன் போராடி வருகிறார் நடிகை சமந்தா. முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், அவரின் உடல்நிலையில் மோசம் அடைந்துவிட்டதாகவும், அதனால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி தீயாகி பரவியது.
உண்மையில் என்ன நடந்தது நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா? அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதா என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நடிகை சமந்தாவின் செய்தி தொடர்பாளர் சமந்தா மருத்துவமனையில் இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. சமந்தா தன் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.இதை கேட்ட ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
நலம் விசாரித்த நாக சைதன்யா
நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வெளியான தகவல் வதந்தி என்று கூறப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா வீடு திரும்பிய பின் யசோதா படத்திற்கு டப்பிங் செய்து கொடுத்தார். பின்னர் யசோதா விளம்பர நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார்.
நடிகை சமந்தா மருத்துமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவரை பிரிந்து வாழும் கணவர் நாக சைதன்யா போன் செய்து நலம் விசாரித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் மீண்டும் ஒன்று சேர உள்ளதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.