பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்வரும் 3 வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனவும் கல்வி அமைச்சர், தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“2023 ஆம் ஆண்டில், நாங்கள் விடுமுறைக் காலத்தைக் குறைத்து, பாடசாலை நேரத்தை அதிகரிக்கவும், அந்த ஆண்டில் பாடத்திட்டத்தை முடிக்கவும் முயற்சிக்கிறோம்.
அதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளை அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்ல முடியும் என தெரிவித்த கல்வி அமைச்சர், வெட்டு மதிப்பெண்கள் இது இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் பல்கலைக்கழக நுழைவுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.