கனடாவில் அனைத்து வகையான வாடகை கட்டணங்களும் மீண்டும் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், சராசரியாக 15.4% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கனடாவில் உள்ள அனைத்து சொத்து வகைகளின் சராசரி மாத வாடகை செப்டம்பர் மாதம் $2,043 ஆக இருந்தது.
அதாவது, செப்டம்பரில் ஒற்றை குடும்ப வீடுகள் மாதத்திற்கு $3,014 என வாடகைக்கு விடப்பட்டன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.1% அதிகமாகும். மேலும், செப்டம்பர் 2021 இல் ஒரு சதுர அடிக்கான வாடகை $1.62 ஆக இருந்தது, இந்த ஆண்டு செப்டம்பரில் $1.70 என அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி காண்டோ குடியிருப்புகளுக்கு மாத வாடகை 171 டொலர் வரையில் அதிகரித்துள்ளது. அத்துடன் பாரம்பரிய வாடகை அடுக்குமாடி குடியிருப்புகளும் 11.8 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளன.
தரைத்தளத்தில் குடியிருப்போருக்கும் வாடகை கட்டணம் 200 டொலர் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. செப்டம்பர் 2022 தரவுகளின் அடிப்படையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் தான் அதிக வாடகை கட்டணம் என தெரியவந்துள்ளது.
சராசரியாக 2,682 டொலர் வாடகை கட்டணம் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். நோவா ஸ்கொடியாவில் கடந்த ஆண்டைவிட 643 டொலர் அதிகரித்து, சராசரி வாடகை கட்டணம் $2,453 எனவும், கடந்த ஆண்டைவிடவும் 36% அதிகரித்து ஒன்ராறியோவில் $2,451 எனவும் உள்ளது.